/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி. விழாவில் கவுரவம்
/
சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி. விழாவில் கவுரவம்
சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி. விழாவில் கவுரவம்
சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி. விழாவில் கவுரவம்
ADDED : செப் 15, 2025 10:51 PM

கோவை; பி.எஸ்.ஜி.மேலாண்மை நிறுவனத்தின் நிறுவன தின விழா, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஜி. மற்றும் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் அறங்காவலர் மற்றும் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
தி இந்து குழுமத்தின் பிசினஸ் லைன் பத்திரிகை ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீநிவாசன், இந்தியப் பல்கலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பங்கஜ் மித்தல், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
2025ம் ஆண்டின் நிறுவன தின விழாவின் ஒரு பகுதியாக, சிறந்த முன்னாள் மாணவர்கள் சமூகத்துக்கும், துறைகளுக்கும் செய்த பங்களிப்புக்காக கவுரவிக்கப்பட்டனர்.
விகாசா குழுமப் பள்ளிகள் தலைவர் வேலசங்கர், ஐடியல் ஸ்டோர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி அடகா ஸ்ரீஷ், சக்தி குழும நிறுவனங்கள் இயக்குனர் ராஜ்குமார், கார்டமம் பிளான்டர்ஸ் பெடரேஷன் தலைவர் ஸ்டானி போத்தன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.