/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைக்காக மக்கள் 10 ஆண்டுகளாக 'தவம்'
/
ரேஷன் கடைக்காக மக்கள் 10 ஆண்டுகளாக 'தவம்'
ADDED : பிப் 23, 2024 11:00 PM
அன்னுார்:குன்னத்தூராம்பாளையத்தில் ரேஷன் கடை அமைக்க கோரி, மக்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அன்னுாரில், கூட்டுறவு பண்டகசாலை சார்பில், பள்ளிவாசல் வீதி, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிர்புறம், ஏ.எம்.காலனி, சொக்கம்பாளையம், குமாரபாளையம், நாகம்மாபுதூர் ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குன்னத்தூராம்பாளையம் மற்றும் பனந்தோப்பு மைல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேஷன் பொருள் பெற அதிக தொலைவு செல்ல வேண்டி உள்ளது. எனவே, குன்னத்தூராம் பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நாகம்மாபுதூர் ரேஷன் கடையில், 1380 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதனால் எப்போது சென்றாலும் அதிக அளவில் கூட்டம் உள்ளது.
மேலும் அனைத்து பொருட்களும், ஒரே முறை வாங்க முடிவதில்லை. மண்ணெண்ணெய்க்கு ஒரு முறை மற்றும் பிற பொருட்களுக்கு ஒருமுறை என இரண்டு அல்லது மூன்று முறை வந்து செல்ல வேண்டி உள்ளது.
குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு தனியாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.