ADDED : பிப் 29, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுார் ஊராட்சியில், சிவன்புரம் நரிக்குறவர் காலனியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தும் அதில் தெருவிளக்குகள் பல ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியினர் கூறுகையில், 'இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதற்குள், தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

