/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு; 595 பெற்று மாணவி சாதனை
/
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு; 595 பெற்று மாணவி சாதனை
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு; 595 பெற்று மாணவி சாதனை
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு; 595 பெற்று மாணவி சாதனை
ADDED : ஜூன் 24, 2025 10:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா, பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் பயின்று, கடந்த மாதம் மே மாதம், 9ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் கணித பாடத்தில், 97 மதிப்பெண் பெற்று, மொத்தம், 592 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த, 22ம் தேதி வெளியிடப்பட்ட மறுமதிப்பீட்டு முடிவுகள் அடிப்படையில், கணிதத்தில், 100 மதிப்பெண்களுடன் மொத்தமாக, 600க்கு, 595 மதிப்பெண்கள் பெற்று, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்தார்.
மாணவியை, பள்ளி தாளாளர் சரோஜினி, பள்ளி முதல்வர் வெங்கடாசலம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி சுபஸ்ரீ, 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.