/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 30, 2025 10:45 PM

வால்பாறை; போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் அரசு உதவி பெறும் மத்திய நடுநிலைப்பள்ளியில், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 86 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று, செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர்.
மாணவர்களுக்கு, முடீஸ் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறினார். அதன்பின், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரூபிகா, கிருஜிலா ஆகியோர் செய்திருந்தனர்.