sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கலோ பொங்கல்!

/

நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கலோ பொங்கல்!

நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கலோ பொங்கல்!

நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கலோ பொங்கல்!


ADDED : ஜன 10, 2024 12:50 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தை பிறந்தா வழி பிறக்கும்' என்பது பல ஆண்டுகளாக நம்மில் கலந்த ஒன்று. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் மிகப் பெரிய அளவில் அறுவடை நாளாக கொண்டாடப்படுவது வழக்கம்.

சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை துவங்கும் இந்த நாள், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இரண்டாம் நாள் சூரிய பொங்கல், சூரியனுக்கு விருந்து படைத்து, நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.

அடுத்ததாக, உழவு தொழிலுக்கு துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, வணங்கி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நான்காவது நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல், உறவுகள், நண்பர்களிடையே அன்பு, உறவை பலப்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.

சர்க்கரைப் பொங்கல்


பொங்கல் அன்று புதுப்பானையில் புதிய அரிசியில், பருப்பு, வெல்லம் கலந்து பொங்கல் செய்துசூரிய பகவானுக்கும், இறைவனுக்கும் படைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்றாலே நினைவிற்கு வருவது சர்க்கரை பொங்கல் தான்.

அரிசி என்பது, செல்வ வளத்தின் அடையாளம். பருப்பு, வலிமையையும், வெல்லம் இனிமையையும் குறிக்கக் கூடியதாகும். வரப்போகும் வசந்த காலத்தில் விளைச்சல் அமோகமாக அமைந்து செல்வ வளமும், அதன் வழியாக வாழ்வில் வலிமையும், இனிமையும் பொங்கி பெருக வேண்டும் என்பதே, சர்க்கரை பொங்கல் வைப்பதற்கானகாரணமாகும்.

வர்த்தகர்கள் உற்சாகம்


கொரோனாவால், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை உற்சாகம் குறைந்தது. தற்போது கொரோனா குறைந்ததால் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. இதனால், சிறு வர்த்தர்கள், பெரு வணிகர்கள் உட்பட அனைவருக்கும் வர்த்தகம் நல்ல முறையில் நடந்தது.

இந்தாண்டு மீண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட, பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக கடைவீதிகளில் ஆர்வமாக பொருட்கள், ஆடைகளை வாங்க துவங்கியுள்ளனர். வீடுகளுக்கு வர்ணம் பூசவும், அலங்கரிக்கவும் துவங்கியுள்ளனர். விளையாட்டு போட்டிகளை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us