/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் பல்கலையில் 'பிரணயா 2024' கலைவிழா
/
கற்பகம் பல்கலையில் 'பிரணயா 2024' கலைவிழா
ADDED : பிப் 24, 2024 08:44 PM

ஈச்சனாரியிலுள்ள கற்பகம் பல்கலையில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைவிழா 'பிரணயா 2024 நடந்தது.
பல்கலை வளாகத்திலுள்ள அரங்கில் நடந்த விழாவில். தனி மற்றும் குழு நடனம், பாட்டு, பேஸ் பெயின்டிங், அடாப்டியூன், வெர்ஸடாலியா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
தனி நபர் நடன பிரிவில், கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் ரோஹித், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரியின் சப்னா ஆகியோரும், எஸ்.என்.எம்.வி.,யின் பாத்திமா ஜனாபர், வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் விஷ்ணுரத்தீஷ் ஆகியோரும், கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் தீபக்குமார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரியின் சிவசக்தி ஆகியோரும், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்,
பேஸ் பெயின்டிங்கில், கிருஷ்ணா கல்லூரியின் தருனிகா, அனுஸ்ரீ ஆகியோரும், ஜெ.எஸ்.எஸ். கல்லூரியின் யோகிதா, விஷ்ணுமாயா ஆகியோரும், கலசலிங்கம் கல்லூரியின் தர்ஷன், கேஸ்ட்ரோ ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை வென்றனர்.
தென் மாநில அளவில் நடந்த இவ்விழாவில், 70 கல்லூரிகளை சேர்ந்த, ஆயிரத்து,500 மாணவர்கள் பங்கேற்றனர்.

