/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி மூன்று கட்டங்களாக வழங்கல்
/
180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி மூன்று கட்டங்களாக வழங்கல்
180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி மூன்று கட்டங்களாக வழங்கல்
180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி மூன்று கட்டங்களாக வழங்கல்
ADDED : மே 26, 2025 10:41 PM

பொள்ளாச்சி; கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி, மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது.
தமிழக கால்நடை துறையில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த, 2024-25ம் நிதியாண்டில், பொள்ளாச்சி கோட்டத்தில், 180 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் விலை, 29 ஆயிரம் ரூபாய். இந்த இயந்திரம், 50 சதவீத மானியத்தில், 14,500 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, ஏற்கனவே, இரு கட்டங்களாக, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. தற்போது, இறுதி கட்டமாக கருவிகள் வழங்க, கோவையில் இருந்து, பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்திற்கு, கருவிகள் தருவிக்கப்பட்டன. இதனை கால்நடைத்துறை, கோட்ட உதவி இயக்குனர் ஓம்முருகன் பார்வையிட்டார்.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் அல்லது, 20 ஆடுகள்; மின்சார வசதியுடன் கூடிய கால் ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.
அதன்படி, புல் நறுக்கும் இயந்திரத்தை, 50 சதவீத மானியத்தில் பெற விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகம் வாயிலாக விண்ணப்பித்தனர்.
அதன்பேரில், துறை ரீதியான அதிகாரிகள், விண்ணப்பத்தை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தனர். அவர்களிடம் இருந்து, 14,500 ரூபாய்க்கான காசோலை பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, 180 புல் நறுக்கும் கருவிகள் தருவிக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.