/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடிந்த நிலையில் ரேஷன் கடைகள் பொருள் வழங்க முடியாமல் தவிப்பு
/
இடிந்த நிலையில் ரேஷன் கடைகள் பொருள் வழங்க முடியாமல் தவிப்பு
இடிந்த நிலையில் ரேஷன் கடைகள் பொருள் வழங்க முடியாமல் தவிப்பு
இடிந்த நிலையில் ரேஷன் கடைகள் பொருள் வழங்க முடியாமல் தவிப்பு
ADDED : ஜூன் 10, 2025 09:34 PM

வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளால், அத்தியாவசிய பொருட்களை வழங்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளுக்கு, 47 ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடிக்கு சொந்தமான, 16 கடைகள் உள்ளன.
எஸ்டேட் பகுதியில் உள்ள கடைகளை யானைகள் இடித்து சேதப்படுத்தியதால், அந்த கடைகளில் பொருட்கள் வழங்க முடியாமல் திறந்த வெளியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக மாணிக்கா, ஸ்டேன்மோர், குரங்குமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் செயல்படும் கடைகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க முடியாத நிலை உள்ளது. யானைகள் சேதப்படுத்திய கடைகளுக்கு மாற்றாக, வேறு கடைகள் வழங்க எஸ்டேட் நிர்வாகங்கள் மறுப்பதால், குறிப்பிட்ட நாளில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் தவிக்கிறோம்.
வால்பாறையில் தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், திறந்தவெளியில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு, கூறினர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால், எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடைகள் தொடர்ந்து சேதமாகி வருகின்றன. பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமடைகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், யானைகள் சேதப்படுத்தாத வகையில் முதல் கட்டமாக ஆறு எஸ்டேட்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற எஸ்டேட்களிலும் விரைவில் இது போன்ற கடைகள் அமைக்கப்படும். சேதமடைந்த கடைகளுக்கு மாற்றாக அந்தந்த எஸ்டேட் அதிகாரிகளிடம் பேசி, வேறு இடம் ஒதுக்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.