/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதிநேர நுாலகம் அமைக்க வாசகர்கள் வேண்டுகோள்
/
பகுதிநேர நுாலகம் அமைக்க வாசகர்கள் வேண்டுகோள்
ADDED : மே 27, 2025 06:51 PM
வால்பாறை : வால்பாறை எஸ்டேட் பகுதியில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் நகரின் மத்தியில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகமும் செயல்படுகிறது.
பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லை. ஆரம்ப காலக்தில் எஸ்டேட் பகுதியில் இயங்கி வந்த மனமகிழ்மன்றமும் தற்போது இல்லை. இதனால், எஸ்டேட் பகுதியில் படித்த இளைஞர்கள் அன்றாட நாளிதழ்கள் வாசிக்க முடியாமலும், நுால்களை படிக்க முடியாமலும் தவிக்கின்றனர்.
மக்கள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பல ஆண்டுளகாக இயங்கி வந்த மனமகிழ்மன்றங்கள் தற்போது மூடப்பட்டதால், வாசகர்கள் அன்றாட நிகழ்வுகளை கூட படிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே,நுாலக துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் பயன்பெறும் வகையில், கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் எஸ்டேட் பகுதியில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கு நாளிதழ்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.