/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணையில் மராமத்து பணிகள்
/
பில்லுார் அணையில் மராமத்து பணிகள்
ADDED : ஜூன் 24, 2025 10:46 PM

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணையில், பல லட்சம் ரூபாய் செலவில், மராமத்து பணிகள் நடைபெறுகின்றன.
பில்லுார் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில், பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கி, 67ம் ஆண்டு முடித்தனர். ஏழு ஆண்டுகள் அணை கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள், 460 சதுர மையில் பரப்பளவில் அமைந் துள்ளன.
பில்லுார் அணையில் நீண்ட காலமாக, மராமத்து பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் அணையில் மராமத்து பணிகள் செய்ய, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து பில்லுார் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் கரையில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த பகுதிகள் முழுவதும், கான்கிரீட் கலவையால் பூசப்பட்டுள்ளது. அணை சுவற்றில் உள்ள காரைகள் பெயர்ந்துள்ள பகுதிகளில், புதிதாக காரை பூச்சுகள் பூசப்பட்டு வருகிறது.
மின்விளக்குகள் புதிதாக மாற்றி அமைக்கும் பணிகளும், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.