sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : மே 26, 2025 04:52 AM

Google News

ADDED : மே 26, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி தேர்ச்சி சதவீதத்த அதிகரிக்கஅரசு பெண்கள் பள்ளியில 'புதுமுயற்சி'


பொதுத்தேர்வு 'ரிசல்ட்' வந்தாச்சு. பள்ளிகள்ல மாணவர் சேர்க்கை எப்படி இருக்குனு விசாரிக்க உடுமலை சுற்றுவட்டார அரசு மேல்நிலைப்பள்ளிகள் பக்கம் போயிருந்தோம்.

அப்ப, உடுமலை நகரத்துல இருக்கற அரசு பெண்கள் பள்ளியில, சேர்க்கைக்கு வந்திருந்த பெற்றோர், பரிதாபமாக காத்திட்டு இருந்தாங்க. ஏன் காத்திருக்காங்கனு விசாரிச்சேன்.

எங்க குழந்தைங்க இந்த பள்ளியில தான் பத்தாம் வகுப்பு முடிச்சுருகாங்க. ஆனா, மார்க் 400க்கும் குறைவா இருக்குனு சொல்லி, அறிவியல் பாடப்பிரிவுல 'அட்மிஷன்' போட மாட்டீங்கறாங்க. 400க்கும் மேல மார்க் இருந்தா மட்டும் தான், அறிவியல் பிரிவுனு சொல்லி, கலைப்பிரிவுல சேர்க்க கட்டாயப்படுத்துறாங்க.

இந்த பள்ளியில, 400க்கு அதிகமா மார்க் வாங்கியது, 15 பேரு தான். அறிவியல் பிரிவுல மாணவர் எண்ணிக்கையை குறைக்கறதுக்கு, இப்படி பண்ணுறாங்க. படிச்ச பள்ளியிலேயே கேட்கற பாடப்பிரிவுக்கு 'அட்மிஷன்' கொடுக்கலைனா, வேற பள்ளியில எப்படி கொடுப்பாங்கணு, பெற்றோர் கோபத்தோட இருந்தாங்க.

அந்த பள்ளியில இருக்கற ஒரு டீச்சர் கிட்ட பெற்றோர் கேள்வி கேட்டதும், பொதுத்தேர்வுல தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கணும்னு உயர் அதிகாரிக சொல்லியிருக்காங்க. அதனால தான் 'டாப்பர்ஸ்' மட்டும் அறிவியல் பிரிவுக்கு சேர்க்கறோம்னு, விளக்கம் கொடுத்து அனுப்பினாங்க.

ஜி.எச்., ரெக்கார்டு கிளார்க் உதாரு'கவனிப்பு'க்காக அலைய விடுறாரு!


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நிறைய பேரு, பிறப்பு, இறப்பு பதிவுக்கு மணிக்கணக்குல காத்திருந்தாங்க.

அரசு மருத்துவமனையில தான் குழந்தை பிறந்தது. பிறப்பு பதிவு செய்யறதுக்கு, ரெக்கார்டு கிளார்க்கு ஒருத்தரு, இன்னைக்கு வா... நாளைக்கு வா...னு அலைய விடுறாரு. அவரு, எப்ப வருவாருனு தெரியல. அதனால, காலையில இருந்து சாப்பிடாம கூட காத்திருக்கேனு ஒருத்தரு சொன்னாரு.

அங்கிருந்த மற்றொருத்தரு, இறப்பு பதிவு பண்ணுறத்துக்கு, நாலு நாளா நடையா நடக்கறேன். போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்த படிவத்துல விபரத்த எழுதி கொண்டு வந்ததும், ரெக்கார்டு கிளார்க் கோபமாயிட்டாரு. நான் கொடுக்கற படிவத்துல தான் எழுதணும்னு சொன்னாரு. அவரு கிட்ட படிவத்த வாங்கி எழுத போனதும், இன்னைக்கு வேண்டாம், எழுதி முடித்து நாளைக்கு கொண்டுவானு அனுப்பிட்டாரு.

அவரு, மதியம், ரெண்டு மணிக்கு வந்துட்டு, அஞ்சு மணிக்கு கிளம்பிருவாரு. ஒரு சில நாளைக்கு வரமாட்டாரு. அவரை 'கவனிப்பு' செய்தா, அலைய விடாம வேலைய முடிச்சு அனுப்புறாரு. இல்லைனா, ஏதாவது ஒரு காரணத்த சொல்லி அலைய விடுறாரு, என, புலம்பினாங்க.

புகார் கொடுக்க போன கவுன்சிலர்கள்'டோஸ்' விட்டு அனுப்பிய பொறுப்பாளர்


வால்பாறை நகராட்சியில நடக்கற கூத்தை கேட்டு, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் மாஜி அமைச்சரே டென்ஷனாயிட்டாராம், என, டீ கடையில் இளைஞர்கள் பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு அவங்க பேச்சை கவனித்தேன்.

வால்பாறை நகராட்சியில பல கோடி ரூபா ஊழல் நடந்திருக்குனு, தி.மு.க., கவுன்சிலர்களே மன்றக்கூட்டத்தை நடத்தவிடாம ரகளையில ஈடுபட்டாங்க. கோவை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிய சந்தித்த கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் செயல்பாடு சரியில்ல, அவர்களை பதவி நீக்கம் செய்யணும் என, கோரிக்கை வச்சிருக்காங்க.

அதை கேட்ட மாஜி அமைச்சரு, தலைமை அறிவித்த தலைவர் வேட்பாளருக்கு எதிராக நீங்க தான், ஓட்டு போட்டு தலைவரை தேர்ந்தெடுத்தீங்க. இப்ப எப்படி அவங்க மீது புகார் கூறலாம். தேர்தல் நேரத்துல, இது மாதிரி புகார் தெரிவிக்கறத விட்டுட்டு, வார்டுல வளர்ச்சிப்பணிகள் செய்ய ஒத்துழைப்பு கொடுங்கனு சொல்லி, புகார் கொடுக்க சென்றவர்களுக்கு 'டோஸ்' விட்டு அனுப்பியிருக்காரு.

இதுல, இன்னொரு வேடிக்கை என்னன்னா, அ.தி.மு.க., கவுன்சிலரும் இவர்களுடன் சென்றதால், அவர் டென்ஷனாயிட்டாராம்,' என்றனர்.

'ஜமாபந்தியில வீடியோ எடுக்காதீங்க...' ஜனநாயகத்த கேள்விக்குறியாக்குறாங்க!


கிணத்துக்கடவு தாலுகா ஆபீஸ்ல ஜமாபந்தி செய்தி சேகரிக்க போயிருந்தேன். மக்கள் நிறைய பேர் மனு கொடுக்க வந்திருந்தாங்க. ஜமாபந்தி ஆபீசர பார்த்து ஒவ்வொருத்தரா மனு கொடுத்தாங்க.

அதைய, மீடியாவுக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுத்தோம். அப்போ, ஊழியர் ஒருத்தரு ஓடி வந்து, போட்டோ மட்டும் எடுங்க. வீடியோ எடுக்காதீங்கனு சொல்லிட்டே இருந்தாரு. ரிப்போர்ட்டர் வீடியோ எடுக்கறாங்களானு கண்காணிச்சுட்டே இருந்தாரு.

வீடியோ எடுக்க வேண்டாம்னு ஏன் சொல்றாங்கனு, அங்கிருந்த மற்றொரு அதிகாரி கிட்ட கேட்டோம். அதுக்கு, மனு கொடுக்க வர்றங்க, ஏதாவது புகார் சொல்லுவாங்க. ஆளுங்கட்சிய பத்தி ஏதாவது பேசுவாங்க. அதையெல்லாம் வீடியோவா எடுத்து போட்டீங்கனா, ஆளுங்கட்சிக்கு தான் கெட்ட பேரு வரும். உயர் அதிகாரிக, தாலுகாவுல இருக்கற அதிகாரிகள கண்டிப்பாங்க. அதனால தான், வீடியோ எடுக்காதீங்கனு சொல்றாங்க.

வீடியோ எடுக்க வேண்டாம்னு சொன்னவரு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸ்ல 'ஓ.ஏ.,'வா இருக்காரு. அவருக்கு மீடியாவ கண்காணிக்கற வேலைய கொடுத்திருக்காங்கனு சொன்னாரு.

மக்கள் பிரச்னைய சொல்லுங்கனு அறிவிப்பு கொடுத்து, ஜமாபந்தி நடத்துறாங்க. இதுல என்ன ஒளிவுமறைவு வேண்டியிருக்குனு தெரியலை. இதைய எல்லாம், கலெக்டர் தான் கவனிக்கணும்.

டிரைவர், கண்டக்டருக்கு 'எக்ஸ்ட்ரா டூட்டி'கிராமங்களுக்கு பஸ்கள ஓட்டாம லுாட்டி


பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல, அரசு பஸ் டிரைவர் நண்பரை சந்தித்தேன். மூனு நாளைக்கு அப்புறம் இப்பத்தான் பஸ்ல இருந்து இறங்கறேன்னு சொன்னார். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.

பொள்ளாச்சியில இருக்கற அரசு போக்குவரத்து கழக மூனு பணிமனைகள்ல இருந்து, 85 டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடத்துல ஓடுது. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும், தினமும், 280 முதல் 340 கி.மீ., துாரம் வரை ஓடுது.

ஆனா, பஸ்களை இயக்க, போதுமான டிரைவர், கண்டக்டர்கள் இல்ல. ஒவ்வொரு பணிமனையிலும், 15 முதல் 20 டிரைவர், கண்டக்டர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கினா தான், பஸ்கள அந்தந்த கிராமங்களுக்கு இயக்க முடியும்.

டிரைவர், கண்டக்டருக்கு 'எக்ஸ்ட்ரா டூட்டி' போடும் போது, அரை மணி நேரம் தாமதமாகத்தான் டெப்போவுல இருந்து பஸ் கிளம்பும். நேரமில்லாத காரணத்தை சுட்டிக்காட்டி, சில கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் போகறதில்ல.

ஒவ்வொரு பஸ்சும், ரெகுலர் டைம்க்கு ரூட்டுல போகாம, தாமதமா போயிட்டு இருக்கு. அதிலும், கோழிக்குட்டை, கூளநாயக்கன்பட்டி, வாளவாடி கிராமங்களுக்கு போகற பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்ல. வழித்தடத்துல, பஸ் 'பிரேக் டவுன்' ஆகி நின்னுட்டா, ரெண்டு 'ட்ரிப்'பை ஓட்டுறதில்ல.

'எக்ஸ்ட்ரா டூட்டி' போட்டு அனுப்பறதால, அதிகாரிகளும் கேள்வி கேட்கறதில்ல. மக்கள் பெரும்பாலும் பஸ்சை நம்பி இல்லாததால, அவங்களும் பஸ் வரலைனு புகார் பண்ணுறதில்லைனு சொன்னாரு.

தாலுகா ஆபீஸ்ல புரோக்கர் ஆதிக்கம்மனுதாரருகிட்ட பணம் பறிக்கறாங்க


உடுமலை தாலுகா ஆபீஸ்ல, புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாயிட்டே போகுதுனு, நண்பர் புலம்பினார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.

கிராம மக்கள் பட்டா மாறுதல் உள்ளிட்ட அரசாங்க சேவைகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலா விண்ணப்பிச்சாலும், வேலை நடக்கறதில்ல. சில விண்ணப்பங்கள கிடப்புல போடுறாங்க; ஏன்னு தெரியல.

இதனால, தாலுகா ஆபீஸ்ல அதிகாரிகள பார்க்க நேரடியா பேச மக்கள் வர்றாங்க. அப்ப, விண்ணப்பதாரர்களை ஓரங்கட்டி, வேலையை முடிச்சு தர்றோம்னு, புரோக்கர்கள் பேரம் பேசுறாங்க. பலரும் ஏமாந்து, அவங்க கேட்கற பணத்த கொடுக்கறாங்க.

இதே மாதிரி, இ-சேவை மையத்துக்கு வருபவர்களையும் 'கவர்' செய்ய முயற்சிக்கிறாங்க. வருவாய்த்துறை அதிகாரிக மாதிரி 'டிப்டாப்' ஆக, தாலுகா அலுவலகத்துல சுத்தற புரோக்கர்கள பார்த்து, அதிகாரிகனு மக்களும் குழம்பி போயிடுறாங்க. இதுல, வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கறதால, புகார் வந்தாலும் யாரும் கண்டுக்கறதில்ல.

ஆன்லைன்ல விண்ணப்பம் பதிவு பண்ணிட்டு, எந்த ஆபீஸ்க்கும் போகம இருந்தா, அதிகாரிகளே போன்ல விசாரிச்சுட்டு, 'ஓகே' பண்ணிடுவாங்க. மக்களுக்கு பொறுமையில்ல; இத புரோக்கருக பயன்படுத்திக்கறாங்கனு சொன்னாரு.

செக்போஸ்ட்ல 'கப்பம்' வசூல்; மறையூர் மக்கள் புகாரு!

உடுமலையில, மாவட்ட வனத்துறை ஆபீஸ்க்கு மறையூர் மக்கள் வந்திருக்காங்க, என்ன பிரச்னைனு ஆபீசர் ஒருத்தரு கிட்ட விசாரிச்சேன்.தமிழகம் - கேரளா இரு மாநிலங்கள இணைக்கும் வகையில, உடுமலை - மூணாறு ரோடு அமைந்திருக்கு. வனப்பகுதியில் இருக்கற இந்த ரோட்டுல, ரெண்டு மாநில வனத்துறையும் சோதனைச்சாவடிகள் அமைச்சிருக்காங்க.ஆனா, தமிழக பகுதியில மட்டும், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சார்பில், ரெண்டு செக்போஸ்ட்கள் இருக்கு. இந்த ரோட்டுல போகற வாகனங்களுக்கு, 'பாஸ்ட்டிராக்' முறையில, நுழைவுக்கட்டணம் வசூலிக்கறாங்க.ரெண்டு சோதனைச்சாவடியிலும், பணியில இருக்கும் சில வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம், முறைகேடா பணம் வசூல் பண்ணுறாங்க. சட்ட விரோதமாக கனிமவளம் கொண்டு போகற லாரிகள பார்த்துட்டா அவர்களுக்கு கொண்டாட்டம்தான். லாரிக்கு, ஆயிரம் ரூபாய் 'கப்பம்' வசூலிக்கறாங்க.மறையூர், காந்தலுார் மக்கள், அவசர மருத்துவ உதவிக்கு, உடுமலைக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள்ல வந்தா, வாகனத்த நிறுத்தி பணம் வசூலிக்கறாங்க. கையில் பணம் இல்லைனு சொன்னா, 'ஜிபே' பண்ணுனு கறாரா வசூலிக்கறாங்க.இது குறித்து, மறையூர், மூணாறு பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் புகார் பண்ணியிருக்காங்க. இனிமேலாவது நம்ம வனத்துறையினர் வசூலை நிறுத்துவாங்களானு பார்ப்போம்னு, விபரமா சொன்னாரு.








      Dinamalar
      Follow us