sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

/

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்


ADDED : ஜன 26, 2024 11:30 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு பகுதிகளில், 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, தேசியக்கொடியை ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய வருவாய்துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார்கள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

* கேசவ் வித்யா மந்திர் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன், கொடியேற்றினார். கல்லுாரி முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

* என்.ஜி.எம்., கல்லுாரியில் முதல்வர் முத்துக்குமரன் கொடியேற்றினார். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், முனைவர் பாலுசாமி, கொடியேற்றினார். மேலாண்மையியல் மாணவர் பிரசன்னகுமார், நித்யஸ்ரீ ஆகியோர் குடியரசு தின சிறப்பு குறித்து பேசினர்.

* என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி கொடியேற்றினார். என்.ஐ.ஏ., செயலர் ராமசாமி தலைமை வகித்தார். கர்னல் ரவி நாராயணன் பேசினார்.

* மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரியில் நடந்த விழாவில், தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பிரபாகரன், கொடியேற்றினார். மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இயக்குனர் கெம்பு செட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* சேத்துமடை அண்ணா நகர் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஐரின் ஸ்டெல்லா கொடியேற்றினார். உதவியாசிரியர்கள் சிவானந்தம், சுகந்தி ஆகியோர் குடியரசு தினம் குறித்து பேசினர்.லயன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி எலைட் தலைவர் ரவிக்குமார், பொருளாளர் மோகன்ராஜ், சர்வீஸ் கமிட்டி சிவக்குமார் ஆகியோர், பள்ளிக்கு பிரிண்டர் வழங்கினர். மரக்கன்றுகள் நடப்பட்டன.

* ஜோதிநகர் 'சி' காலனி மக்கள் நல சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில், சங்க தலைவர், ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காசிவிஸ்வநாதன், கொடியேற்றினார்.

* சாம்பமூர்த்தி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில், சங்க பொருளாளர் சாவித்ரி கொடியேற்றினார். சங்க தலைவர் பாலகங்காதரன், செயலாளர் கந்தகுமார், டாக்டர் கனகராஜ் பங்கேற்றனர்.

* சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி தலைவர் சேதுபதி தலைமை வகித்து கொடியேற்றினார். கல்லுாரி முதல்வர் சோமு முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

* ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., பள்ளியில் முதல்வர் அரசு பெரியசாமி வரவேற்றார். பள்ளி தாளாளர் சுப்ரமணியம் கொடியேற்றினார். செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி பங்கேற்றனர்.

* பக்கோதிபாளையம் தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ், கொடியேற்றினார். உதவி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

* பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கண்காணிப்பாளர் ராஜா கொடியேற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறுவாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

* பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில், தலைவர் மயில்சாமி தலைமை ஏற்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர் லக்கிகுமார்ஜெயின் கொடி ஏற்றினார். இதில், அறக்கட்டளை நிர்வாகிகள் மக்கள் பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு


* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராதிகா கொடியேற்றினார். பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 100 சதவீத வருகை புரிந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வில் முதல், 2ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் கொடியேற்றினார். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் குறித்து மாணவர்களிடையே தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

* கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கொடி ஏற்றினார். குடியரசு தினம் பற்றி தெரிவிக்கப்பட்டது. போலீஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை


வால்பாறை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாசுதேவன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அழகுசுந்தரவள்ளி கொடியேற்றினார். காந்திசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விழாவில், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் கொடி ஏற்றினார். சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.

* வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில், குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us