/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் நல வாரியத்துக்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
/
தொழிலாளர் நல வாரியத்துக்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
தொழிலாளர் நல வாரியத்துக்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
தொழிலாளர் நல வாரியத்துக்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
ADDED : மே 27, 2025 10:26 PM
கோவை : தமிழக அரசு அமைத்த கைவினை தொழிலாளர் நல வாரியம், பொற்கொல்லர் தொழிலாளர்கள் நல வாரியத்துக்கு தலைவர் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக முதல்வருக்கு, விஸ்வஜன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன் அனுப்பியுள்ள கடிதம்:
2021 சட்டசபை தேர்தலின்போது, தங்களை சந்தித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதரவு அளித்தோம். தமிழகத்தில், 85 லட்சம் விஸ்வகர்மா சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புக்காக, தமிழக அரசால் கைவினை தொழிலாளர் நல வாரியம், பொற்கொல்லர் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
வாரியம் அமைத்ததில் இருந்து, இப்போது வரை இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. விஸ்வகர்மா சமூக மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அப்பதவியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.