/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி தீர்மானம்
/
கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி தீர்மானம்
ADDED : ஜன 26, 2024 11:04 PM
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், ஆலாங்கொம்பு விநாயகர் திடலில் நடந்தது. ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரண்ணன் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் பேசியதாவது:
மத்திய அரசு அறிவித்துள்ள 'சேவை பெறும் உரிமை சட்டத்தை' தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். புளூ ஹில்ஸ் அவென்யூ, சக்தி நகர், குறிஞ்சி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளது; உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்.
குறிஞ்சி நகர், ஜடையம்பாளையம் புதுார், சக்தி நகர், பசுமை நகர், அப்துல்கலாம் நகர், இனியா நகர் ஆகிய நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற, குறிஞ்சி நகரில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் காலம் கடத்தும், ஜடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி செயலர் நந்தினி நன்றி கூறினார்.

