/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் கடை விரிப்பு; விபத்து அபாயம் அதிகரிப்பு
/
ரோட்டோரத்தில் கடை விரிப்பு; விபத்து அபாயம் அதிகரிப்பு
ரோட்டோரத்தில் கடை விரிப்பு; விபத்து அபாயம் அதிகரிப்பு
ரோட்டோரத்தில் கடை விரிப்பு; விபத்து அபாயம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 25, 2025 09:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ரோட்டோரத்தில் கடை விரிக்கும் வடமாநில வியாபாரிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பருவமழையின் தாக்கம், தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிர் நிலவுகிறது. பலரும், குளிர் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் ஜர்க்கின், ரெயின்கோட், ஸ்வெட்டர் அணிந்தவாறு செல்கின்றனர்.
இதனை சாதமாக்கிக் கொண்டு, கம்பளி, தரைவிரிப்புகள், பிளாஸ்டிக் சேர்கள் உள்ளிட்ட பொருட்களை விற்க, வடமாநில வியாபாரிகளும் முகாமிட்டுள்ளனர். வீடுகள் தோறும் நேரடியாக சென்று விற்பனை செய்ய முற்படுகின்றனர். ஆங்காங்கே ரோட்டோரத்தில் தற்காலிக கடைகள் அமைத்தும் வருகின்றனர். இதனால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
மக்கள் கூறியதாவது:
பல்லடம் ரோடு, வால்பாறை, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில், வடமாநில வியாபாரிகள் சாலையோரத்தில் தற்காலிக கடைகள் அமைக்கின்றனர். இங்கு,ஸ்வெட்டர், போர்வை, தலைக்குல்லா, ஸ்கார்ப், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தம் செய்கின்றனர். இதனால், பின்னால் செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். விபத்து அபாயம் அதிகரிக்கும் சூழலும் நிலவுகிறது. ரோட்டில் இருந்து, சற்று துாரத்தில், கடைகள் அமைத்தால், பாதிப்பு இருக்காது. இவ்வாறு, கூறினர்.