/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 24, 2025 10:57 PM

கோவை; சசி கிரியேட்டிவ் கல்லுாரிகள், புதுமையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்புக்குப் பெயர் பெற்ற, டில்லியை தலைமை இடமாகக் கொண்ட, கட்டடக்கலை நிறுவனமான சி.பி.,குக்ரேஜா ஆர்க்கிடெக்ட்ஸ் உடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் வாயிலாக, அதிநவீன கட்டடக்கலை தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு நடைமுறைகளுடன் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். இரு நிறுவனங்களும், மாஸ்டர் பிளான்ஸ், ஐ.டி., பூங்காக்கள் போன்ற முக்கியமான பிராந்திய கட்டடக்கலை திட்டங்களில், கூட்டாகச் செயல்படும்.
''இத்தகைய நேரடி தொழில் தொடர்பு, மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற அனுபவத்தை அளித்து, எதிர்கால தொழில்முறை பணிகளுக்கு, மாணவர்களை திறம்பட தயார்படுத்தும்,'' என சசி கிரியேட்டிவ் கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ராஜ்தீபன் சுவாமிநாதன் தெரிவித்தார்.