/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல் தின உறுதிமொழி; மாணவர்கள் பங்கேற்பு
/
அறிவியல் தின உறுதிமொழி; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 29, 2024 11:21 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் திருநாவுக்கரசு உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அறிவியல் மன்ற ஆசிரியர் கருப்புசாமி சர்.சி.வி. ராமன் குறித்தும், அவருடைய கண்டுபிடிப்புகளால் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும், பேசினார். ஆசிரியர் நந்தினி நன்றி கூறினார். திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அகஸ்தியா மற்றும் காக்னிசண்ட் பவுண்டேஷன் சார்பில், தேசிய அறிவியல் தின விழாவையொட்டி, அறிவியல் கண்காட்சி நடந்தது.
வட்டார வள கல்வி அலுவலர் ரங்கராஜ் கண்காட்சியை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியை உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மாணவர்கள், 30க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
காக்னிசண்ட் பவுண்டேஷனை சேர்ந்த அய்யப்ப சாமி, விக்னேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

