/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 26, 2024 11:37 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கல்லுாரியில், வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணிதவியல் துறையினருக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.கணித துறை தலைவர் புஷ்பலதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்து, கணிதவியல் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.
கணிதவியல் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து விரிவான கருத்துக்களை, பெங்களூரு சி.எம்.ஆர்., பல்கலை பேராசிரியர் பங்கஜம் பேசினார்.
கணிதவியல் மன்றத்தின் செயலர் மூன்றாம் ஆண்டு மாணவி இந்திரா நன்றி கூறினார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

