/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்
காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்
காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்
ADDED : ஜூன் 28, 2025 10:49 AM
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மெடிக்கல் பரமசிவம்: பொள்ளாச்சியில் 4 வது மண்டல பாசனகால்வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழலில், வடசித்துார், செங்குட்டுபாளையம், கஞ்சம்பட்டி, காட்டம்பட்டியிலுள்ள நான்கு கால்வாய்களும் துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சரியாக போய்சேரும்.
கலெக்டர்: 1 கோடியே 24 லட்சம் ரூபாயில், 206 கி.மீ.,க்கு, கால்வாய் துார்வாரும் பணிக்கு அரசிடம் அனுமதி கேட்டு, திட்ட அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரங்கசாமி: காற்றுக்கு சாய்ந்து போன வாழை மரங்களுக்கு இழப்பீடாக கேரளாவில் மரம் ஒன்றுக்கு, 110 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 6.70 காசு கொடுக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாது.
காளிச்சாமி: விவசாயிகள் பெரும் பயிர் கடனுக்கு, சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறையை கைவிட வேண்டும்.
பட்டா மாறுதல், நிலஅளவை, விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனுக்களை சமர்ப்பித்தனர்.