/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடையில் சர்வர் பிரச்னை: பொது மக்கள் அவதி
/
ரேஷன் கடையில் சர்வர் பிரச்னை: பொது மக்கள் அவதி
ADDED : மே 26, 2025 11:15 PM
அன்னுார்; அன்னுார் தாலுகாவில், கடந்த இரண்டு மாதமாக ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்வோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பெரிய புத்தூர் மக்கள் கூறுகையில்,' ரேஷன் பொருட்கள் வாங்க சென்றால் உங்கள் ரேகை பதிவாவதில்லை, சர்வர் பிரச்னை என திருப்பி அனுப்புகின்றனர். இந்த மாதத்தில் இதுவரை ஐந்து முறை ரேஷன் கடைக்கு சென்று விட்டோம். இன்னும் பொருள் வாங்க முடியவில்லை. நான்கு நாட்களில் மாதமே முடிய உள்ளது.
இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.ரேஷன் பொருட்களை வழங்கவும், சர்வர் பிரச்னையை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.