sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 14, 2026 ,சித்திரை 1, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தீர்வு

/

 தீர்வு

 தீர்வு

 தீர்வு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ ரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய உணவு தானியங்களி லும் பூச்சித் தொல்லை, உலகளாவிய பிரச்னை. இதற்குத் தீர்வு கண்டு தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார் கோவை, 'ஸ்ரீ விருந்தா கிரைன்டெக்' நிர்வாக இயக்குநர் பாலாஜி.

ரசாயனப் பயன்பாடின்றி, பூச்சிகளையும் முட்டைகளையும் தானியங்களில் இருந்து பிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள அவரிடம் பேசினோம்…

எங்கள் குடும்பம் அரிசி மொத்த வியாபாரத்தில் இருந்தது. இதில் செல்லுப்பூச்சி பெரிய பிரச்னை. முன்பு, ரசாயனம் வைத்து பூச்சிகளைக் கொன்று, பெண்களை வைத்து முறத்தில் புடைத்து சுத்தம் செய்வர். பள்ளியில் படிக்கும்போதே இதற்குத் தீர்வு காண வேண்டும் எனத் தோன்றியது. முதுகலை பட்டம் பெற்றதும், தீவிரம் காட்டினேன். வேளாண் பல்கலை, பூச்சியியல் துறையை அணுகி, பூச்சியின் வகைகள், அவற்றின் வாழ்வியல், அகற்றும் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொண்டேன். ஆறுமாதம் ஆராய்ச்சிக்குப் பிறகு, 'கிரெய்ன் இன்செக்ட் அண்டு எக் ரிமூவல்' இயந்திரத்தை உருவாக்கினோம்.

இந்த இயந்திரத்தில் அரிசியைக் கொட்டினால், அது இறந்த பூச்சியை தனியாக பிரித்துவிடும். உயிருள்ள பூச்சிகள் தானியத்தின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும். அதையும் பிரிக்கும். பூச்சி, தானியத்தின் மீது முட்டையிட்டு பிணைத்துவிடும். அந்த முட்டையையும் பிரித்து விடும். இந்த நடைமுறைகளின்போது அரிசி உடையாது. அரிசி வீணாகாது. துளியும் ரசாயனமில்லை என்பது கூடுதல் சிறப்பு.

பெரும்பாலும் 5 வகையான பூச்சிகள்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அரிசி மட்டுமின்றி, பருப்பு, தாமரை விதை (மக்கானா) என வெவ்வேறு தானியங்களையும் சுத்தப்படுத்தலாம். அதற்கு இயந்திரத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த இயந்திரம், வியாபாரி, அரிசி ஏற்றுமதியாளர்கள், வெளிநாடுகளில் வாங்கி இருப்பு வைப்பவர்கள் என அனைவருக்குமானது. அமெரிக்கா, ஆஸி., என 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வேளாண் பல்கலையின் வேளாண் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் வாயிலாக, தொழிலை விரிவு செய்வதற்கான உதவிகளைப் பெற்றோம்.

தற்போது 2 மில்லியன் டன் சுத்திகரிக்கும் திறன் பெற்றிருக்கிறோம். இதை 2027க்குள் 3 மடங்காக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம். தானியங்களில் இருந்து பூச்சியைப் பிரிக்கும் இயந்திரம் தவிர, குடோன்களில், பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிக்கும் 'யூ.வி. லைட் டிராப்' உபகரணத்தையும் தயாரிக்கிறோம், என்றார்.

இந்திய உணவுக் கழகம், ராணுவம், அக் ஷய பாத்திரம் திட்டம் என தேசிய அளவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இவரின் கண்டுபிடிப்பை பயன்படுத்துகின்றனர்.

தொடர்புக்கு: vrinthagrainstechpvtltd @gmail.com

பிரச்னைக்கு தீர்வு. அதுதான் ஸ்டார்ட்அப் உருவாவதற்கான மந்திரச் சொல். இப்பகுதியில் ஸ்டார்ட்அப் வெற்றிக்கதைகள் தொடர்ந்து வரும்.




    • Dinamalar Events


    Dinamalar