/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் கோவை - திண்டுக்கல் இடையே இயக்கம்
/
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் கோவை - திண்டுக்கல் இடையே இயக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் கோவை - திண்டுக்கல் இடையே இயக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் கோவை - திண்டுக்கல் இடையே இயக்கம்
ADDED : ஜன 26, 2024 12:40 AM
பொள்ளாச்சி:தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில்கள் வரும், 28ம் தேதி வரை இயககப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு, பழநிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் அதிகளவு சென்று வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக, கோவை - திண்டுக்கல் இருடையே நேற்று முதல் வரும், 28ம் தேதி வரை ரயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து, தினமும் காலை, 9:20 மணிக்கு புறப்படும் ரயில், மதியம், 1:00 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடைகிறது.திண்டுக்கல்லில் இருந்து, மதியம், 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை, 5:30மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனை சென்றடைகிறது.
கோவையில் இருந்து, போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி பிரிவு, மடத்துக்குளம், புஷ்பத்துார், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி வழியாக திண்டுக்கல் சென்றடைகிறது.
இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்கிறது. அதில், கிணத்துக்கடவுக்கு காலை, 9:52 மணிக்கு வருகிறது. பொள்ளாச்சியில் காலை, 10:13 மணிக்கு வரும் ரயில், 10:15 மணிக்கு புறப்படுகிறது.கோமங்கலம் ஸ்டேஷனை, 10:46 மணிக்கு அடைந்து, 10:47 மணிக்கு கிளம்புகிறது. உடுமைலை ஸ்டேஷனை காலை, 11:00 மணிக்கு அடைந்து, 11:01 மணிக்கு கிளம்புகிறது.
அதே போன்று திண்டுக்கல்லில் இருந்து வரும் ரயில், உடுமலைக்கு மாலை, 3:33 மணிக்கு வந்து, 3:34க்கு கிளம்புகிறது. கோமங்கலத்துக்கு 3:47க்கு வந்து, 3:48க்கு கிளம்புகிறது. பொள்ளாச்சிக்கு, 4:18க்கு வந்து, 4:20க்கு கிளம்புகிறது. கிணத்துக்கடவை, 4:43க்கு அடைந்து, கோவையை மாலை, 5:30 மணிக்கு சென்றடைகிறது. இதனால், கோவை, கிணத்துக்கடவு, உடுமலை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழிப்புணர்வு
பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், கொங்கு மண்டல பழக்க மொழியில் தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், தைப்பூசத்தையொட்டி கோவை - திண்டுக்கல் இயக்கப்படும் ரயில் எண், 06077 மற்றும், 06078 என்ற எண்ணுக்கு மாற்றாக, 06039 மற்றும், 06040 என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

