/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்டாம்ப்' கண்காட்சி இன்று, நாளை நடக்கிறது
/
'ஸ்டாம்ப்' கண்காட்சி இன்று, நாளை நடக்கிறது
ADDED : ஜன 09, 2024 10:43 PM
பாலக்காடு:தபால் துறை சார்பில், பாலக்காடு மற்றும் ஒற்றப்பாலம் பிரிவுகள் ஒருங்கிணைந்து நடத்தும் 'ஸ்டாம்ப்' கண்காட்சி, இன்றும் நாளையும் நடக்கிறது.
பாலக்காடு சந்திரநகர் பார்வதி கல்யாண மண்டபத்தில் நடக்கும் கண்காட்சியை பி.எஸ்.என்.எல்., பாலக்காடு பொது மேலாளர் இளந்திரை துவக்கி வைக்கிறார்.
கேரளாவில் உள்ள பிரபல தபால் தலை சேகரிப்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாம்ப்கள் 'பாம்பெக்ஸ் -2024' என்ற பெயரில் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
அரசு விக்டோரியா கல்லுாரியின் வரலாறு குறித்த புகைப்படங்கள் நிகழ்ச்சியில் வெளியிடப்படும். 'ஸ்டாம்பில்' ஒருவரின் சொந்த புகைப்படத்தை பதிக்கும் திட்டமான 'மை ஸ்டாம்ப்' பெறுவதற்கான வசதியும் கண்காட்சியில் ஏற்படுத்தப்படுகிறது, என, ஒற்றப்பாலம் தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்தார்.

