/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து ஏற்படுத்திய மாணவர் தற்கொலை
/
விபத்து ஏற்படுத்திய மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 30, 2025 10:34 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பைக்கில் சென்று விபத்து ஏற்படுத்தியதற்கு, அம்மா திட்டியதால் கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் செம்பன்பாளையத்தை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் மோனிஷ், 19. பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படித்து வந்தார். கல்லுாரி அருகே, அறை எடுத்து தங்கி படித்த மாணவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது, ரோட்டில் வந்த சிறுமி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மோனிஷ், ஊரில் உள்ள அம்மாவிடம் போனில் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது அம்மா, போனில் திட்டியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த மோனிஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.