/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டேலி பிரீமியர் லீக்கில் அசத்திய மாணவர்கள்
/
டேலி பிரீமியர் லீக்கில் அசத்திய மாணவர்கள்
ADDED : மார் 25, 2025 05:56 AM

கோவை; யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை மற்றும் ஜி.கே.எம்., குளோபல் சர்வீசஸ் நிறுவனம் இணைந்து, டேலி பிரீமியர் லீக் போட்டியினை, சாய்பாபா காலனியில் உள்ள, யுனைடெட் இன்போடெக் மையத்தில் நடத்தியது.
யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜி.கே.எம்., குளோபல் சர்வீசஸ் நிறுவனர் கார்த்திகேயன் பங்கேற்றார்.
கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.மூன்று சுற்றுக்களாகநடைபெற்ற போட்டியில், பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாணவி தியா ஷாஜி, முதல் பரிசு வென்றார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே, யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ரபிக், மணிகண்டன் மற்றும் லோகேஷ், கவுசல்யா மற்றும் அன்னாள் சோபியா ஆகியோர் பெற்றனர்.கல்லுாரியின் முதல்வர் விஜயா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.