/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் மொபைல்போன் பயன்பாடு; பெற்றோரிடம் தெரிவித்தும் மாற்றமில்லை
/
மாணவர்களின் மொபைல்போன் பயன்பாடு; பெற்றோரிடம் தெரிவித்தும் மாற்றமில்லை
மாணவர்களின் மொபைல்போன் பயன்பாடு; பெற்றோரிடம் தெரிவித்தும் மாற்றமில்லை
மாணவர்களின் மொபைல்போன் பயன்பாடு; பெற்றோரிடம் தெரிவித்தும் மாற்றமில்லை
ADDED : ஜூலை 01, 2025 10:08 PM
பொள்ளாச்சி; பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வரும் மாணவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோரை அழைத்து கண்டித்தும், பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை, என, தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பள்ளி மாணவ, மாணவியரின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும், சிலர், ரகசியமாக பள்ளிக்கு மொபைல்போன் எடுத்துச் சென்று, 'ரீல்ஸ்' மோகத்தில், வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய முற்படுவதாகவும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை தடை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு, பள்ளிக்கல்வி துறை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசியம் கருதி, பள்ளிக்கு மாணவர்கள் மொபைல்போன் கொண்டு வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அறிவுரை வழங்கி கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில், மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், அத்துமீறலை கண்டறிந்தாலும் தடுக்க முடியவில்லை. மொபைல்போன் எடுத்து வருவதுடன், வகுப்பறையிலேயே வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவேற்ற முற்படுகின்றனர்.
பெற்றோரை அழைத்து கண்டித்தும், பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. அன்புடன் கூடிய கண்டிப்பு, கண்காணிப்பு இருந்தும் அத்துமீறும் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோரும் பொறுப்புடன் நடந்து கொண்டால், மொபைல்போன் உலகத்தில் இருந்து மாணவர்களை மீட்க முடியும். இவ்வாறு, கூறினர்.