/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு
/
நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு
ADDED : மார் 24, 2025 11:12 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பகுதியில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில், குற்றங்களை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும், ஒரு எஸ்.ஐ., மூன்று போலீசார் குழுவாக துப்பாக்கி ஏந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, பொள்ளாச்சி பகுதியில்,பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் கூறுகையில், 'பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி, தங்களது பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்க தயங்காமல் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார், தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக குற்ற செயல்களின் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட இருந்த, சரித்திர பதிவேடு குற்றவாளிகளைபொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் மற்றும் தாலுகாபோலீசார் கைது செய்தனர்.