/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும்'
/
'குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும்'
ADDED : பிப் 24, 2024 10:17 PM
கோவை பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லுாரியில், உலகத் தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரியின் செயலர் ராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஜேப்பியார் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் அன்புசிவா பேசுகையில், ''உலக மொழிகளில் சிறந்த மொழியாக தமிழ்மொழி போற்றப்படுகிறது.
உலகில் உள்ள 6,000 மொழிகளில், ஆறு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியை பெற்றுள்ளது.
இளைஞர்களுக்கு நம் தாய்மொழியான, தமிழ் மொழி மீது பற்று வேண்டும். குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழின் சிறப்புகள், நம் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகளை தமிழில் கற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
தமிழ்த்துறைத்தலைவர் மார்கரெட் மாலதி, கல்லூரி முதல்வர் தெக்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

