/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.217 கோடி கடன் வழங்க இலக்கு
/
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.217 கோடி கடன் வழங்க இலக்கு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.217 கோடி கடன் வழங்க இலக்கு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.217 கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : ஜூன் 13, 2025 09:33 PM
பொள்ளாச்சி; கோவை மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள் வாயிலாக, நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 217 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ஏற்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில், கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 லட்சம், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் 39 கிளைகள், 260 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, தமிழக அரசின் தள்ளுபடி திட்ட அறிவிப்புக்கு பின், 2020 -21ம் நிதியாண்டில், 34 ஆயிரத்து 465 உறுப்பினர்களை கொண்ட, 3,837 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 76.66 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த, 2022-23ம் நிதியாண்டில், 1,545 குழுக்களுக்கு, 97.95 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 89.72 கோடி ரூபாய், 2023-24ம் நிதியாண்டில், 2,374 குழுக்களுக்கு, 159.70 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 169.99 கோடி ரூபாய், 2024-25ம் ஆண்டில், 2,440 குழுக்களுக்கு, 195.20 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 189.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 217 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரு மாதங்களில் மட்டும், 413 குழுக்களுக்கு, 48.09 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.