/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் தைப்பூச திருவிழா: பாதயாத்திரையாக சென்ற பெண்கள்
/
ஈஷாவில் தைப்பூச திருவிழா: பாதயாத்திரையாக சென்ற பெண்கள்
ஈஷாவில் தைப்பூச திருவிழா: பாதயாத்திரையாக சென்ற பெண்கள்
ஈஷாவில் தைப்பூச திருவிழா: பாதயாத்திரையாக சென்ற பெண்கள்
ADDED : ஜன 26, 2024 01:30 AM

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷாவில், தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோவை ஈஷாவில், தைப்பூச திருவிழா நேற்று லிங்க பைரவி சன்னதியில் சிறப்பாக நடந்தது. இதனையொட்டி, ஆலாந்துறை அடுத்த கள்ளிப்பாளையத்தில் இருந்து, நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, சுற்று வட்டார கிராம மக்கள், மலைவாழ் மக்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தகள் என, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தில், ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல, அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி திருமேனியின் ரதத்தை பெண் பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து சென்றனர். பகல், 12:00 மணிக்கு, லிங்க பைரவி சன்னதியில் ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து, தேவிக்கு அபிஷேகம் நடந்தது.
தைப்பூசத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் தேவிக்கு, தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருள் பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த, 21 நாட்கள், ' பைரவி சாதனா' என்ற விரதம் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதங்களை நிறைவு செய்தனர்.

