/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று துவங்குகிறது ஆசியா நகை கண்காட்சி
/
இன்று துவங்குகிறது ஆசியா நகை கண்காட்சி
ADDED : ஜன 19, 2024 04:23 AM

கோவை : திருமணம் மற்றும் விழாக்கால நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, 'ஆசியா நகை கண்காட்சி 2024' ரேஸ்கோர்ஸ் தாஜ் விவான்டா ஓட்டலில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி 2024 தென்னிந்தியாவில் பிரபலமான கண்காட்சியாகும். இது, கோவையில், ஜன., 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது.இதில் தனித்துவமிக்க தங்க நகைகள், இந்திய அளவில் முன்னணி, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள் என பலவகையான நகைகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.
கண்காட்சியில், தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், அரிதான கல் நகைகள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள்இடம் பெற்றுள்ளன.
வராஸ்ரீ ஜுவல்லர்ஸ் (பெங்களுரு), சீகல் ஜூவல்லர்ஸ் (டில்லி), நாகா கிரியேஷன்ஸ் (மும்பை), இபான் ஹவுஸ் (மும்பை), சிரியான் ஜூவல்ஸ் (மும்பை), ஜீவா ஜூவல்லரி (மும்பை), யுப் ஜூவல்லரி (மும்பை), என்.ஏ.சி., ஜூவல்ஸ் (சென்னை), டயமன்ட் ஜூவல்லரி (மும்பை), எப்.இ.சட்., ஜெம்ஸ் (ஜெய்ப்பூர்), பி.இ.எம்., டயமன்ஸ் (திருப்பூர்), அடுல் ஜூவல்லரி (டில்லி) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

