/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 01, 2024 11:05 PM

அன்னூர்:தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், தினமும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரில் சத்தி ரோட்டில், நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. கிழக்கே இட்டேரி வீதி, மேற்கே தர்மர் கோவில் வீதி உள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்ட அத்திக்கடவு பிரதான குழாயில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண் இளகியதால் தார் சாலையில், 2 அடி அகலத்திற்கு, 40 அடி நீளத்திற்கு, அரை அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பள்ளம் வேகமாக வரும் வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதனால் தினமும் குறைந்தது இரண்டு வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. இந்த இடத்தில் விபத்துக்களை தவிர்க்க போலீசார் டிவைடர் வைத்துள்ளனர். எனினும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்,'காலை மாலை என தொடர்ந்து விபத்து நடக்கிறது. அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் கசிவை அடைத்து, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சமன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.

