/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பரிக்கும் அதிரப்பள்ளி அருவி; சுற்றுலா பயணியருக்கு தடை
/
ஆர்ப்பரிக்கும் அதிரப்பள்ளி அருவி; சுற்றுலா பயணியருக்கு தடை
ஆர்ப்பரிக்கும் அதிரப்பள்ளி அருவி; சுற்றுலா பயணியருக்கு தடை
ஆர்ப்பரிக்கும் அதிரப்பள்ளி அருவி; சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : மே 28, 2025 01:41 AM

வால்பாறை : கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணியருக்கு கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இரு மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் வரை சுற்றுலா பயணியர் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், வால்பாறை - சாலக்குடி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் மழையால் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலா பயணியர் இங்கு செல்ல கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கேரள மாநிலம், சாலக்குடி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் அதிகரித்துள்ளது.
இதே போல் சுற்றியுள்ள ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலா பயணியர் நீர்நிலைகளின் அருகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை - சாலக்குடி ரோட்டில் கனமழை பெய்வதால் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.