/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கலன்றும் கடமை தவறாத போக்குவரத்து துறை
/
பொங்கலன்றும் கடமை தவறாத போக்குவரத்து துறை
ADDED : ஜன 16, 2024 11:25 PM
கோவை;பொங்கல் திருநாளில் விடுமுறை எடுத்துக்கொள்ளாமல், சாலை பாதுகாப்பு விழா நடத்தி, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தங்களுக்கு கடமைதான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர்.
நேற்று முன்தினம், கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால், சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்பட்டது. நஞ்சப்பா சாலை மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் நின்றபடி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவகுருநாதன், சத்யகுமார், பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வதீபா, விஜயகுமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர், வாகனங்களில் சென்றவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர்.

