/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் மொழியில் இல்லாததே இல்லை; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
/
தமிழ் மொழியில் இல்லாததே இல்லை; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
தமிழ் மொழியில் இல்லாததே இல்லை; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
தமிழ் மொழியில் இல்லாததே இல்லை; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
ADDED : ஜூன் 10, 2025 09:44 PM

கோவில்பாளையம்; 'தமிழ் மொழியில் இல்லாத விஷயங்களே இல்லை,' என, தமிழ்ச் சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.
கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை சோதி மைய அறக்கட்டளை சார்பில், முப்பெரும் விழா, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு) தேன்மொழி தலைமை வகித்து பேசுகையில், ''மேலாண்மை, அறிவியல், தத்துவம், விண், கடல், மண் என அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளது. தமிழில் இல்லாததே இல்லை.
தமிழ் இலக்கியங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாசியுங்கள். வாழ்க்கை இனிமையாக அமையும்,'' என்றார். தமிழாசிரியர் முனியாண்டி, மாணவி நர்கிஸ், சோமசுந்தரம் ஆகியோர் பேசினர்.
ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர் உரிமையாளர் ராமதாஸ் பேசுகையில், ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலார் வழியில், அனைவரிடமும் அன்பு செலுத்தி, அன்னமிட்டு பசியாற்றினால் மகிழ்ச்சி அடையலாம்,'' என்றார்.
பவதாரணி சிறப்புரையாற்றினார். பெரியபுராண நாயன்மார்களை நினைவு கூரும் நிகழ்ச்சிக்கு பேராசிரியர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
உயர்கல்வி குறித்து குமரேசனும், தமிழ் மொழி குறித்து கர்னல் வீர ராச வில்லவன் கோதையும் பேசினர்.
இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற ஏழாம் வகுப்பு மாணவி ஹரிதாவுக்கு, புத்தகங்கள், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.