/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா
/
திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா
திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா
திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா
ADDED : ஜன 16, 2024 11:47 PM
போத்தனூர்;குறிச்சி திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
குறிச்சி குளக்கரையில் நடந்த விழாவிற்கு, மாநகராட்சி கவுன்சிலர் குணசேகரன் தலைமை வகித்தார். அரசு, தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியில் வென்றவர்களுக்கு, பதக்கம் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமியருக்கும் பதக்கம், விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த திருமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், எம்.எல்.ஏ., தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், முன்னாள் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, மறுமலர்ச்சி மக்கள் இயக்க மாநில தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் பரிசு வழங்கினர்.
கவுன்சிலர் காதர், தமிழ்நாடு காங்., கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பறை, தப்பாட்டம். ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.

