/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 24, 2024 12:09 AM

திருத்தேர் திருவிழா
பெரியகடை வீதி, கோனியம்மன் கோவிலில், திருத்தேர் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி முகூர்த்தக்கால், பூச்சாட்டு, கொடியேற்றம் நடந்தது. அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, இரவு, 7:00 மணிக்கு மேல் நடக்கிறது.
ரகுவீர கத்யம்
ராம்நகர், ஸ்ரீகோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், 'ரகுவீர கத்யம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. ராமர் கோவில், பிரவசன மண்டபத்தில், காலை, 7:00 முதல் இரவு, 8:30 மணி வரை சொற்பொழிவு நடக்கிறது. வேளுக்குடி ரங்கநாதன் சொற்பொழிவாற்றுகிறார்.
திருத்தேர் வடம் பிடித்தல்
மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், திருத்தேர்ப் பெருந்திருவிழா நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாத சுவாமிகள், காலை, 5:30 மணக்கு, திருத்தேருக்கு எழுந்தருள்கின்றனர். திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
நவசண்டியாகம்
தடாகம் ரோடு, கே.என்.ஜி., புதுாரிலுள்ள, திரி நேத்ர தசபுஜ வக்கர காளியம்மன் கோவிலில், உலக நலன் வேண்டி, மகா நவசண்டியாக விழா நடக்கிறது. கோவில் வளாகத்தில், காலை, 7:30 முதல், இரவு, 8:30 மணி வரை, சிறப்பு ஹோமம், தீபாராதனை, பூஜைகள் நடக்கின்றன.
ராமாயண சொற்பொழிவு
பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. வேளுக்குடி ரங்கநாதன், 'ராமாயணம் - பால காண்டம்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை, 6:30 முதல் 8:30 மணி வரை சொற்பொழிவுநடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது. இதேபோல், டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில்,'கட உபநிஷத் பாஷ்யம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
வீடு, கார் கடன் கண்காட்சி
யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி நடக்கிறது. திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில், காலை, 10:00 முதல், இரவு, 7:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், தகுதி அடிப்படையில் உடனடி கடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
சிறுவாணி இலக்கியத் திருவிழா
பள்ளிக்கல்வித்துறை பொது நுாலக இயக்ககம் சார்பில், சிறுவாணிஇலக்கியத் திருவிழா நடக்கிறது. அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு விழா துவங்குகிறது. பல்வேறு தலைப்புகளில் இலக்கிய ஆர்வலர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
கம்பன் காட்டும் வாழ்வியல்
பீளமேடு, பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், ஆன்மிக இலக்கியத் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழல்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை, 5:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. 'கம்பன் காட்டும் வாழ்வியல்' என்ற தலைப்பில், டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை தமிழ் பேராசிரியர் சதீஸ்குமார் உரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழா
கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கே.பி.ஆர்., கலை அறவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி நடத்தும், அதிநவீன தொழில்நுட்ப மாநாடு, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
பாரா விளையாட்டு முகாம்
கங்கா மருத்துவமனை மற்றும் சிறுதுளி பவுண்டேசன் சார்பில்,பாரா ஸ்போர்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், கங்கா முதுகு தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில், காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.