/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தலுக்கு 'ரெடி' அலுவலர்களுக்கு பயிற்சி
/
லோக்சபா தேர்தலுக்கு 'ரெடி' அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 23, 2024 11:02 PM
பெ.நா.பாளையம்:லோக்சபா தேர்தல் நெருங்குவதால், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமை வகித்தார். வடக்கு தாசில்தார் மணிவேல் முன்னிலை வகித்தார்.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 435 ஓட்டு சாவடிகளில் தலா, 10 ஓட்டு சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் நியமனம் செய்யப்படுபவர்.
இவர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட ஓட்டு சாவடிகளில் பணியாற்றும் ஓட்டு சாவடி அலுவலர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுவது, ஓட்டுப்பதிவை நியாயமாக, நேர்மையாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை அறிவுறுத்துவர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி தேர்தல் துணை தாசில்தார் கதிரேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.