/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., பிரமுகர் தற்கொலை அமைச்சர்கள் அஞ்சலி
/
தி.மு.க., பிரமுகர் தற்கொலை அமைச்சர்கள் அஞ்சலி
ADDED : ஜன 26, 2024 12:48 AM

அன்னுார்:கோவை மாவட்டம், காளப்பட்டி, பிள்ளையார் கோவிலில் வசித்து வந்தவர் பையா கவுண்டர் என்றழைக்கப்படும் கிருஷ்ணன், 67. ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். மனைவி வசந்தாமணி. இரண்டு மகள்கள் திருமணமாகி கோவையில் வசிக்கின்றனர்.
சரவணம்பட்டி பகுதி செயலராகவும், இரண்டரை ஆண்டுகள், கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலராகவும் இருந்தார். ஓராண்டுக்கு முன், மாவட்ட செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், காளப்பட்டி அருகேயுள்ள அவரது தோட்டத்து வீட்டில், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், அவருடைய உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இவரது உடலுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி உட்பட தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

