/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்
/
மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 26, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த வடக்கிப்பாளையம் போலீசார், 1,418 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி டாஸ்மாக் கடை (2290) மதுபான பார் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தபாலமுருகன்,39, சூர்யா, 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,418 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.