/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை இணைப்பு; கல்லுாரி வீராங்கனைகள் தேர்வு
/
பல்கலை இணைப்பு; கல்லுாரி வீராங்கனைகள் தேர்வு
ADDED : மே 26, 2025 11:59 PM

கோவை; சர்வதேச பல்கலைகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில், பாரதியார் பல்கலை வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
சர்வதேச பல்கலைகளுக்கான தடகளப் போட்டிகள் ஜெர்மனியில், ஜூலை 17ம் தேதி நடக்க உள்ளன. இதில், கோவை பாரதியார் பல்கலை இணைப்புக்கல்லுாரியான உடுமலை ஜி.வி.ஜி., பெண்கள் கல்லுாரி மாணவி ஏஞ்சல் சில்வியா, 100, 200 மீ., ஓட்டப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவி ஸ்ரீ வர்த்தினி, 400 மீ., தடை தாண்டும் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
மாணவி ஏஞ்சல் சில்வியாவுக்கான செலவு தொகை, ரூ.2.50 லட்சத்தை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீ வர்த்தினிக்கான செலவை, ஒரு தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தேர்வான மாணவியரை, பல்கலை பதிவாளர் ரூபா, துணைவேந்தர் குழு உறுப்பினர் அஜித்குமார் லால் மோகன், உடற்கல்வி இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் பாராட்டினர்.