/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டம்
/
மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டம்
ADDED : ஜன 09, 2024 10:33 PM

சூலுார்:மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டத்தில் சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில், பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தச்சர், இரும்பு கொல்லர், பொற்கொல்லர், மண்பாண்ட கலைஞர்கள், சிற்பி, கூடை, பாய், கால் மிதியடி தயாரிப்போர், கொத்தனார், தையல் கலைஞர், முடி திருத்துவோர், பூ மாலை கட்டுவோர், சலவை தொழிலாளி, தங்க நகை தொழில், சிற்ப வேலை, பாத்திர வேலை செய்வோருக்கு, அவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக, வட்டியில்லா கடன் மற்றும் தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தொழிலாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் முகாம் ஊராட்சி வாரியாக நடக்கிறது.
சூலுார் வட்டாரத்தில் நடந்த முகாம்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் விபரங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
கணியூர் ஊராட்சி,ஊஞ்சப்பாளையத்தில் நடந்த முகாமில், ஏராளமானோர் பங்கேற்று விபரங்களை பதிவு செய்தனர். பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், சதீஷ்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதுவரை விஸ்வ கர்மா திட்டத்தில் சேராதவர்கள் அருகில் நடக்கும் முகாம்களில் பங்கேற்று விபரங்களை பதிவு செய்து பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

