/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி
ADDED : ஜூன் 25, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் ஜூலை, 7, 8 தேதிகளில் நடக்கிறது.
போட்டிகள், எஸ்.ஆர்.பி.டி.சி., டிராபி - 2025 என்ற தலைப்பில் நடக்கின்றன. கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள், தங்கள் அணியின் பெயரினை ஜூலை, 1ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டிகள் ஜூலை, 7, 8 தேதிகளில் துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. விபரங்களுக்கு, 97893 50600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.