/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு
/
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு
ADDED : ஜன 09, 2024 08:39 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால், பாசனத்துக்கு நீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.
இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்காததால், நேற்று முன்தினம் ஆழியாறு நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அதிகாரிகளுடன் விவசாயிகள் பேச்சு நடத்தினர். அதிகாரிகள், அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், பாசனத்துக்கு நீர் தர இயலாது. நிலை பயிர்களை காப்பாற்ற, 700 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே நான்கு மாத காலத்துக்குள் வழங்குவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கையை அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில், 'பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு உட்பட்ட, 6,400 ஏக்கர் நிலங்களுக்கு நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில், இன்று (10ம் தேதி) முதல் மார்ச் 10ம் தேதி வரை, 60 நாட்களில், 30 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் ஆழியாறு அணையில் இருந்து, 350 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளிக்கப்படுகிறது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

