/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் பகுதியில் என்ன இப்படி தாறுமாறு! கோவைப்புதுாரில் இஷ்டத்துக்கு நிறுத்தப்படும் வாகனங்களால் தவிப்பு
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் பகுதியில் என்ன இப்படி தாறுமாறு! கோவைப்புதுாரில் இஷ்டத்துக்கு நிறுத்தப்படும் வாகனங்களால் தவிப்பு
ஆர்.டி.ஓ., ஆபீஸ் பகுதியில் என்ன இப்படி தாறுமாறு! கோவைப்புதுாரில் இஷ்டத்துக்கு நிறுத்தப்படும் வாகனங்களால் தவிப்பு
ஆர்.டி.ஓ., ஆபீஸ் பகுதியில் என்ன இப்படி தாறுமாறு! கோவைப்புதுாரில் இஷ்டத்துக்கு நிறுத்தப்படும் வாகனங்களால் தவிப்பு
ADDED : ஜூலை 16, 2024 02:18 AM

1. சேறும், சகதியுமான ரோடு
கோவை மாநகராட்சி, 87வது வார்டு, குறிஞ்சி நகர், இரண்டாவது வீதியில், நாராயணசாமி வீதியில், சாலை மோசமாக சேதமடைந்து, சேறும், சகதியுமாக உள்ளது. நடக்கவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது.
- வேல்ராஜ், குறிஞ்சி நகர்.
2. தாழ்வான மின்ஒயர்கள்
நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், கிருஷ்ணம்மாள் நகர், ரெங்கா காலனி, முதல் தெருவில், மின்ஒயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளன. மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து மின் ஒயர்களை சீரமைக்க வேண்டும்.
- மணி, குருடம்பாளையம்.
3. சிக்னலை மறைக்கும் விளக்கு
மேட்டுப்பாளையம் - கோவை ரோடு, தொப்பம்பட்டி பிரிவு சிக்னலில், மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு, சிக்னல் தெரிவதில்லை. சிக்னல் தெரியாதபடி தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கை மாற்றி அமைக்க வேண்டும்.
- கோபால், மேட்டுப்பாளையம்.
4. இரவில் தொடரும் விபத்து
தொண்டாமுத்துார் ரோடு, பொம்மணாம்பாளைம் பிரிவு செல்லும் வழியில், சாலை விரிவாக்கத்திற்காக குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில், தெருவிளக்குகள் இல்லததால், இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
5. டெங்கு நோய் அபாயம்
பீளமேடு, 26 வது வார்டு, நேரு நகர் இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாராததால் அடைத்துள்ளது. குடியிருப்பு பகுதி முழுவதும், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
- சுப்பிரமணியன், பீளமேடு.
6. சாலையில் தாறுமாறு பார்க்கிங்
கோவைப்புதுார், ஆர்.டி.ஒ., அலுவலக பகுதியில், சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறுகலான பாதையில் வாகனங்கள் செல்லும்போது, பாதசாரிகள் நடக்க இடமே இருப்பதில்லை.
- தங்கவேல், கோவைப்புதுார்.
7. செவிசாய்க்காத மின்வாரியம்
கோணவாய்க்கால்பாளையம், 99வது வார்டு, பத்மாலயா லே-அவுட், கம்பம் எண் 29, முறிந்து கீழே விழுந்துவிட்டது. கம்பம் எண், 18ல் தெருவிளக்கு எரியவில்லை. புதிய கம்பம் அமைக்கவும், விளக்கை மாற்றவும் கடந்த ஒரு மாதமாக வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- வினோதி, 99வது வார்டு.
சாக்கடை அடைப்பு
பி.என்.பாளையம், பழையூர், 49வது வார்டில், சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. குழந்தைகள், பெரியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- முத்துக்குமார், பி.என்.பாளையம்.
வேகத்தடையால் விபத்து
வெள்ளலுார், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. விபத்து நடக்கிறது. சரியான உயரத்திற்கு வேகத்தடையை சீரமைக்க வேண்டும்.
- நாகராஜ், வெள்ளலுார்.
சுகாதார பணிகளில் சுணக்கம்
சீரநாயக்கன்பாளையம், 75வது வார்டு, திலகர் வீதியில், சீரான இடைவெளியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. தெருவில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ராஜசேகர், திலகர் வீதி.