/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வு
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வு
ADDED : பிப் 06, 2024 01:57 AM
திருப்பூர்:மத்திய அரசின் ஆற்றல் மற்றும் வளங்கள் மற்றும் நிறுவனம் சார்பில், இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வு நடைபெறவுள்ளது.
நாட்டின் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னையை மையமாக கொண்டு கல்லுாரி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மத்திய அரசின் ஆற்றல் மற்றும் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த தலைப்பில் இளைஞர் 'ஒலிம்பியாட்' தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும், 18 முதல், 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, ஏப்., 8 முதல், 12ம் தேதி வரை, மொத்தம், 60 நிமிடங்கள் இந்த தேர்வு ஆன்லைனில் நடக்கவுள்ளது.
ஐம்பது கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் https://ugcnet.nta.nic.in/ இணைய தளத்தில் உள்ளது.
வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு குறித்த விபரங்கள் ஒவ்வொரு கல்லுாரி இ-மெயில் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கும் பகிரப்பட்டு, கல்லுாரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட உள்ளது.