sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறுமைய போட்டிகளில் வென்ற ஜமீன் ஊத்துக்குளி மாணவர்கள்

/

குறுமைய போட்டிகளில் வென்ற ஜமீன் ஊத்துக்குளி மாணவர்கள்

குறுமைய போட்டிகளில் வென்ற ஜமீன் ஊத்துக்குளி மாணவர்கள்

குறுமைய போட்டிகளில் வென்ற ஜமீன் ஊத்துக்குளி மாணவர்கள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர்கள், மன்ற போட்டிகள் மற்றும் குறுமைய அளவிலான போட்டிகளின் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி தெற்கு வட்டார அளவிலான மன்ற போட்டிகள், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அப்போட்டியில், ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்டுரைப் போட்டியில் மாணவி அக் ஷரா, ஆங்கிலம் கட்டுரைப் போட்டியில் மாணவி நுாதனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோல, தமிழ் பேச்சுப்போட்டியில் மாணவர் நித்திஸ்குமார் இரண்டாமிடம், ஆங்கிலம் கவிதை எழுதுதலில் மாணவர் பாலகார்த்திக் இரண்டாமிடம், ஆங்கிலம் கட்டுரைப் போட்டியில் மாணவி கயல்விழி மூன்றாமிடம் பிடித்தனர். இவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல, குறு மைய அளவிலான விளையாட்டு போட்டியிலும், இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 400 மீ., ஓட்டம், 17 வயது மாணவர் பிரிவில் ஹரீஸ் இரண்டாமிடம்; கேரம், 14 வயது மாணவியர் பிரிவில் மதுமித்ரா முதலிடம்; 17 வயது மாணவர் பிரிவில் நிஷாந்த் முதலிடம்; சதுரங்கம் 17 வயது மாணவர் பிரிவில் குரு இரண்டாமிடம் பிடித்தனர்.

மேலும், சிலம்பம், 17 வயது மாணவியர் பிரிவில் ஸ்ருதிகா முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை, தலைமையாசிரியர் முருகேஸ், ஆசிரியர்கள் பாராட்டினர்.




    • Dinamalar Events


    Dinamalar