ADDED : ஜூலை 25, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த விசூர், அன்னங்காரன்குப்பம் கிராமத்தில் கேட்பாரற்று கிடந்த 780 கிலோ ரேஷன் அரசி பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி அடுத்த விசூர், அன்னங்காரன்குப்பம் வடக்கு தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், நேற்று ஆய்விற்கு சென்றனர். அப்போது, அந்த கிராமத்தின் வழியில், ரேஷன் அரிசி 780 கிலோ, 15 சிப்பம் கேட்பாரற்று இருந்தது. இதனை வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம் கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தார்.