/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 23, 2024 02:21 AM

நெய்வேலி : நெய்வேலியில் பா.ம.க., மாவட்ட நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
நெய்வேலியில் பா..ம.க., வடக்கு மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் வினோத், சரவணன், விஜயசாரதி, கந்தன், அருண், பார்த்திபன், தமிழரசன், சுபசேகர், ஆனந்த், அருள்ராஜ் ,அற்புதவேல், ஆசைமுத்து, அரிநாதன், பாலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வரவேற்றார்.